கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; புரோட்டா மாஸ்டர் சாவு


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; புரோட்டா மாஸ்டர் சாவு
x
தினத்தந்தி 13 March 2022 2:43 AM IST (Updated: 13 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் பலியானார்

அஞ்சுகிராமம், 
அஞ்சுகிராமம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் பலியானார்
 புரோட்டா மாஸ்டர்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலப்பெருவிளையை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 37). இவர், சாமிதோப்பில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் லட்சுமணன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அழகப்பபுரத்தில் இருந்து சாமிதோப்புக்கு செல்ல புன்னார்குளம் சந்திப்பு அருகில் வந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமத்தை நோக்கி கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.
சாவு
அப்போது அந்த வழியாக கன்னியாகுமரி தீயணைப்பு வாகனம் வந்தது. அதில் லட்சுமணனை ஏற்றி சென்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் லட்சுமணன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து லட்சுமணன் மனைவி ராஜாத்தி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story