மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 13 March 2022 2:55 AM IST (Updated: 13 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் வட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம் பேசினார். தமிழக அரசும், மின்வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380-ஐ அனைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கி, அவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இதேபோல் இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்தை தலைநிமிர வைத்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு வருகிற 16-ந்தேதி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக நடைபெறக்கூடிய மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பெரம்பலூர் வட்டாரத்தில் இருந்து 2 பஸ்களில் தொழிலாளர்கள் சென்று கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story