மக்கள் நீதிமன்றத்தில் 17,743 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 17,743 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 March 2022 2:56 AM IST (Updated: 13 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் 17,743 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தாமரைக்குளம்:

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது அரியலூரில் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி ஆனந்தம், குடும்ப நல நீதிபதி செல்வம், அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் சார்பு நீதிபதி மும்மூர்த்தி, நீதித்துறை நடுவர்கள் சந்திரசேகர், செந்தில்குமார், திவ்யா ஆகியோர் தீர்வு அளித்தனர். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் திருமேனி, சிறப்பு சார்பு நீதிபதி வடிவேல், நீதித்துறை நடுவர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் வழக்குகளுக்கு தீர்வு அளித்தனர்.
மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 18 சிவில் வழக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 30 ஆயிரத்து 974, 31 மோட்டார் வாகனங்கள் வழக்குகளில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 95 ஆயிரத்து 300, 890 சிறு, குறு வழக்குகளில் ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 300, 3 காசோலை வழக்குகளில் ரூ.4 லட்சத்து 22 ஆயிரம், 30 குடும்ப நல வழக்குகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 161 வழக்குகளில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 78 ஆயிரத்து 712, போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பான 16,638 வழக்குகளில் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 600 என மொத்தம் 17 ஆயிரத்து 743 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

Next Story