காட்டுப்பன்றி மீது மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வியாபாரி தவறி விழுந்து பலி


காட்டுப்பன்றி மீது மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வியாபாரி தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 13 March 2022 2:58 AM IST (Updated: 13 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றி மீது மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வியாபாரி தவறி விழுந்து இறந்தார்.

பவானிசாகர்
காட்டுப்பன்றி மீது மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வியாபாரி தவறி விழுந்து இறந்தார். 
வியாபாரி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த மாதையன் லே-அவுட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ராம்குமார் (வயது 38) இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் வேஸ்ட் துணி மொத்த வியாபாரம் செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் ராம்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து திடீரென்று ஒரு காட்டுப்பன்றி ரோட்டை கடந்தது. 
சாவு
இதில் எதிர்பாராதவிதமாக  காட்டுப்பன்றியின் மீது அவருடைய மோட்டார்சைக்கிள் மோதியது. இதனால் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ராம்குமார் இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story