கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகள் எரிந்து நாசம்


கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 March 2022 3:35 AM IST (Updated: 13 March 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஜம்பை அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகள் எரிந்து நாசம் ஆனது.

பவானி
ஜம்பை அருகே உள்ள கருக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). விவசாயி இவர், தனக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலையில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், தோட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள கரும்பை வெட்டி டிராக்டரில் ஏற்றி சென்றனர். 
டிராக்டர் சென்ற சிறிது நேரத்தில் தோட்டத்தில் காய்ந்துபோன கரும்பு தோகைகள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து உள்ளது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் இருந்த பகுதிக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே இதுபற்றி அங்கிருந்தவர்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில், தோட்டத்தில் போடப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகள் எரிந்து நாசம் ஆனது. மேலும் அங்கிருந்த 10 தென்னை மரங்களின் கிளைகளும் கருகியது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர். 

Next Story