பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 7 நாட்கள் விடுமுறை
பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 7 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, ‘வருகிற 18-ந் தேதி ஹோலி பண்டிகை என்பதால் அன்று மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் வருகிற 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வணிகர்கள் வருகை இருக்காது. 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுக்கு விடுமுறை. எனவே வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும்’ என்றார்.
Related Tags :
Next Story