நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி; ரவுடி கைது
நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38). இவர் நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள காபி பார் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவுடி கோபி (35), அய்யப்பனை திடீரென வழிமறித்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகை, ரூ.1,050 ரொக்கத்தை பறித்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் கோபியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் நகை, ரூ.1,050 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். கைதான கோபி மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story