கல்வியில் சிறந்துவிளங்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வியில் சிறந்துவிளங்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், கொரோனா கால கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக முன்கூட்டியே 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மாணவ, மாணவிகள் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவ, மாணவிகள் அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார். இதில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ராஜா வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story