செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் ஒரு நாள் ‘சஸ்பெண்டு’
செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் ஒரு நாள் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டு உள்ளனர்.
எடப்பாடி,:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கு தினமும் தாமதமாக வருவதாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி தலைமை ஆசிரியர் மலர்விழி உள்பட 7 ஆசிரிய- ஆசிரியைகள் பள்ளிக்கு தாமதமாக வந்தனர். இதனால் பள்ளிக்கு தாமதமாக வந்த அவர்கள் 7 பேரையும் நேற்று ஒரு நாள் ‘சஸ்பெண்டு’ செய்து முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story