ஓய்வு பெறும் வயதை உயர்த்த அரசு அலுவலக உதவியாளர்கள் வலியுறுத்தல்


ஓய்வு பெறும் வயதை உயர்த்த அரசு அலுவலக உதவியாளர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2022 3:58 AM IST (Updated: 13 March 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெறும் வயதை உயர்த்த அரசு அலுவலக உதவியாளர்கள் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு இடத்தில் பணிபுரிபவர்களுக்கு இட மாறுதல் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பதவி உயர்வு பட்டியல் அடிப்படையில் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தொழில் வரியை கடைநிலை ஊழியர்களுக்கு குறைத்து பிடித்தம் செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர்களுக்கு வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். சீருடை வழங்க வேண்டும். பெண் அலுவலக உதவியாளரை மாலை 6 மணிக்கு மேல் பணியில் அமர்த்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அசோகன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் துணைத் தலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.

Next Story