சேலத்தில் 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலத்தில் 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைந்த வட்டியில் கடன்
சேலம் சின்னவீராணம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் நிதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன் தருவதாகவும் தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய சரவணன் அவரிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கேட்டார். மேலும் மர்ம நபர் தெரிவித்தப்படி முன்பணமாக ரூ.92 ஆயிரத்து 400-யை அவர் கூறிய வங்கிக்கணக்குக்கு சரவணன் செலுத்தினார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் சரவணனுக்கு கடன் ஏதும் வழங்கவில்லை. அந்த நபருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பின்னர் இந்த மோசடி குறித்து சரவணன் சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பதிவிறக்கம்
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). அவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த லிங்கை அவர் பதிவிறக்கம் செய்து வங்கிக்கணக்கு எண் மற்றும் ஓ.டி.பி. எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்தார். இதையடுத்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.69 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து செந்தில்குமார் சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story