வரி செலுத்தாத 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நெல்லையில் வரி செலுத்தாத 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
2021-2022-ம் ஆண்டுக்கான வரிவசூல் வருகிற 31-ந்தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிக அளவில் நிலுவை வைத்து நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோட்டில் ஒரு வீடு, டவுன் புதுக்கிராமம் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீடு, புகழேந்தி தெருவில் ஒரு வீடு என மொத்தம் 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திடும் வகையில், நிலுவை வரிகளை காலதாமதம் இன்றி மாநகராட்சி கணிணி வரி வசூல் மையத்தில் செலுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story