கடையம் அருகே 3 பாம்புகள் பிடிபட்டன
கடையம் அருகே ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன.
கடையம்:
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை அறிந்த பஞ்சாயத்து தலைவர் கணேசன் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து, அங்கு பதுங்கியிருந்த சுமார் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்.
இதேபோல் கடையம் அருகே உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவர் வயலில் கிடந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும், கடையத்தை சேர்ந்த சங்கர் வர்மா என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பையும் வனத்துறையினர் பிடித்தனர். அந்த 3 பாம்புகளும் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story