சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி மையம்
தென்காசி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரிலோ அல்லது 9789118638 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story