திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்


திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 13 March 2022 4:51 PM IST (Updated: 13 March 2022 4:51 PM IST)
t-max-icont-min-icon

திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் நேற்று, சென்னை முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஸ்ரீபிரியா, பாரதியாரின் நினைவுகளைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், விளக்கவுரையாற்றினார்.

மேலும், சென்னை எழும்பூர், மாகாண அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு இயல், இசை, நாடக நிகழ்ச்சியும், சென்னை அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு சென்னை எழும்பூர், கேரளா வித்தியாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் குழுப்பாட்டு, குழு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குனர் அண்ணாதுரை, உதவி இயக்குனர் கலைச் செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story