தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம்; ஆணையாளர் சாருஸ்ரீ
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வரக்கூடிய பாதையான கொம்புகாரநத்தம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story