பிள்ளைகளுடன் தாய் திடீர் மாயம்
சேத்துப்பட்டு அருகே பிள்ளைகளுடன் தாய் திடீர் மாயம்
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருந்ததிபாளையத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 35),
கூலித்தொழிலாளியான அவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மனைவி சுசீலா (30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
4-ந்தேதி சுசீலா தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டு வருவதாக, தனது தந்தையிடம் தெரிவித்து வெளியில் சென்றார்.
ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. அவர்களை பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் சுசீலாவின் தந்தை முருகேஷ் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுசீலா மற்றும் பிள்ளைகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story