குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 13 March 2022 5:54 PM IST (Updated: 13 March 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தரிசனம்

பெருமாநல்லூர் அருகே வணங்காமுடியனூர் கிராமத்தில் மகா பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் குலதெய்வ கோவிலாகும்.  இதையடுத்து  தமிழிைச சவுந்திரராஜன் தனது கணவருடன் மகா பெரியசாமி கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமிக்கு ஐம்பொன்னால் ஆன இரண்டு கிரீடங்கள் மற்றும் இரண்டு மாலை ஆபரணங்களை வழங்கினார். சாமி தரிசனம் செய்த பிறகு  தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்துடன் கோவை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். தெலுங்கானா கவர்னர் வருகையை முன்னிட்டு மகா பெரியசாமி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக அவருக்கு கோவில் சார்பாகவும் உறவினர்கள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சார்பாகவும் மாலை மற்றும் சால்வை கொடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Next Story