குற்ற சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்


குற்ற சம்பவங்களை தடுக்க  கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2022 6:06 PM IST (Updated: 13 March 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வலியுறுத்தினார்.

வேடசந்தூர்:
வேடசந்தூா் அருகே கூம்பூரில், போலீஸ் துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், கிராமப்பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து ஊர்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். வியாபார கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். செல்போனில் யாரேனும் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண் குறித்து கேட்டால் கூறக்கூடாது. படிக்கும் பெண் குழந்தைகள் தவறான பாதையில் செல்வதை தடுக்க வேண்டும். கல்விக்காக மட்டுமே செல்போனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக யாரும் நடமாடினால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ேவண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story