குடியாத்தம் அருகே பீடி தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்
குடியாத்தம் அருகே பீடி தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் மத்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் நல ஆணையம் சென்னை மண்டலம் மற்றும் குடியாத்தம் பீடி தொழிலாளர் நல மருந்தகம் இணைந்து குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் இந்திய சுதந்திரத்தின 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.விஜயகுமார், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சாமிநாதன் வரவேற்றார். மத்திய அரசின் தொழிலாளர் சேமநல நிதியத்தின் மாவட்ட மருத்துவ அலுவலர் என்.உத்தமன் தலைமையில் பீடி தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Related Tags :
Next Story