கொரோனா பாதித்த 17 பேருக்கு தொடர் சிகிச்சை
புதுச்சேரியில் கொரோனா பாதித்த 17 பேருக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி, மார்ச்.13-
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த ஒரேயொருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 17 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 4 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 0.25 சதவீதமாகவும், குணமடைவது 98.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 209 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,522 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 52 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 5 ஆயிரத்து 637 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story