புதுவையில் சமாதி திருவிழா


புதுவையில் சமாதி திருவிழா
x
தினத்தந்தி 13 March 2022 6:17 PM IST (Updated: 13 March 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

புதுவை திப்புராயப்பேட்டையில் சமாதி திருவிழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி, மார்ச்.13-
புதுவை திப்புராயப்பேட்டையில் சமாதி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
சமாதி திருவிழா
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கல்லறை திருவிழாவினை கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் தங்களது முன்னோர்களின் கல்லறையில் வழிபாடு நடத்துவார்கள்.
அதேபோல் புதுவையில் உள்ள ஆதிதிராவிட மக்கள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதி திருவிழாவினை நடத்தி வருகின்றனர். இதன்படி 153-வது ஆண்டு சமாதி திருவிழா திப்புராயப்பேட்டை சன்னியாசிதோப்பு இடுகாட்டில் நடந்தது.
உணவு பண்டங்களை படைத்து...
நிகழ்ச்சியில் ஆதிதிராவிட மக்கள் தங்கள் முன்னோர்களின் சமாதிகளை சீர்செய்து அழகுபடுத்தினார்கள். அதன்பின் அங்கு பூக்களை தூவி, முன்னோர்களுக்கு பிடித்த உணவு பண்டங்களை படையலிட்டு வழிபாடு செய்து கும்பிட்டனர். முன்னதாக நேற்று காலை கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் அருகிலிருந்து அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. சுப்பையா சாலை வழியாக வந்த அம்மன் ஊர்வலம் சன்னியாசிதோப்பை அடைந்தது.
சமாதி திருவிழாவினை முன்னிட்டு சன்னியாசிதோப்பு பகுதியில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இடுகாடு அருகே தற்காலிக கடைகளும் முளைத்திருந்தன. இதற்கான ஏற்பாடுகளை 21 கிராம ஆதிதிராவிட பஞ்சாயத்து குழு கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

Next Story