வயல்களில் ஆட்டு கிடைகள் அமைக்கும் விவசாயிகள்
கம்பம் பகுதியில் வயல்களில் ஆட்டு கிடைகள் விவசாயிகள் அமைத்துள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2-ம்போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பம் காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் புற்கள் நன்றாக வளர்ந்துள்ளது. இதையடுத்து கம்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை வயல்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, அப்பியபட்டியை சேர்ந்த விவசாயிகள் கம்பம் பகுதியில் உள்ள வயல்களில் கிடைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு கிடைகள் அமைத்து வளர்க்கப்படும் ஆடுகள் வயல்களில் வளரும் புற்களை சாப்பிட்டு வருவதால் நன்கு வளர்ச்சி அடைகின்றன. அவ்வாறு வளரும் ஆடுகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. மேலும் வயல்களில் கிடைகள் அமைத்து ஆடுகளை வளர்ப்பதால் அதன் எச்சம் மற்றும் கழிவுகள் வயல்களுக்கு உரமாவதால் மண் வளம் ெபறுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story