நத்தமாக மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்


நத்தமாக மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2022 6:55 PM IST (Updated: 13 March 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

நத்தமாக மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்

ிருப்பூர் சாமளாபுரத்தில் ஆதிதிராவிடர் மக்கள்  குடியிருக்கும் இடத்தை நத்தமாக மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. கூறினார். 
போராட்டம்
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதியில்  150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியாக உள்ளது என்றும், இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் 21 நாட்களுக்குள் தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையின் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. 
 இந்த பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களை காலி செய்யக் கோரியதை கண்டித்து ஆதிதிராவிடர் மக்கள்  12வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
தொல்.திருமாவளவன்
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது  மூன்று தலைமுறையாக வசித்துவரும் மக்களுக்கு நீர்நிலை புறம்போக்கு வகையில் உள்ள குடியிருப்பு பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்கவேண்டும் எனவும் இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story