விதிகளைமீறும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்


விதிகளைமீறும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 March 2022 7:11 PM IST (Updated: 13 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பஸ்நிலைய பகுதியில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கம்பம்: 

கம்பம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து சிக்னலில் இருந்து காளியம்மன் கோவில் வரை உள்ள நகரின் பிரதான சாலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி, குமுளி வழியாக கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் ஏ.கே.ஜி.திடல் வழியாக செல்கின்றன. 

இதேபோல் தேனி, குமுளி மார்க்கமாக புதிய பஸ்நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் மாரியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், சிக்னல் வழியாக சென்று வருகின்றன. 

இந்நிலையில் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சிக்னல் வரை பஸ் செல்லக்கூடிய பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

எனவே போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story