பெண்ணை தாக்கியவர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள கல்விளை மேலதெருவைச் சேர்ந்த சுடலை மனைவி மூக்கம்மாள் (வயது 55). சுடலை உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மூக்கம்மாள் மகன் இசக்கித்துரைக்கும், கல்விளை வேதக்கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இரட்டைமுத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்விளை வழுக்கை குளம் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மூக்கம்மாள், மகள்கள் கனகா, இசக்கியம்மாள் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரட்டைமுத்து அவர்களை அவதூறாக பேசியதுடன், கீழே தள்ளி மூக்கம்மாளை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூக்கம்மாள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரட்டைமுத்துவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story