மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட விடுதி காப்பாளர்
சேத்துப்பட்டு அருகே அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட விடுதி காப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட விடுதி காப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அரசு நிதியுதவி பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பத்தியாவரம் கிராமத்தில் அரசு நிதியுதவி பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தில் ‘அன்பு இல்லம்’ என்ற விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த விடுதி காப்பாளராக தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் (வயது 37) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடியில் வசித்து வருகின்றனர்.
ஓரின சேர்க்கை
இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் 8 மாணவர்களுடன் துரைப்பாண்டியன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சைல்ட் லைனுக்கு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் முருகேஷ் உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் நேற்று இரவு விடுதிக்கு சென்று துரைப்பாண்டியனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதில் சம்பவம் உண்மை என தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியனை கைது செய்தனர். மேல் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story