தார்வழி கல்லாங்குளம் கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்
அணைக்கட்டு அருகே தார்வழி கல்லாங்குளம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே தார்வழி கல்லாங்குளம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.
காளை விடும் விழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தார்வழி கல்லாங் குளம் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், விரிஞ்சிபுரம் போலீசார் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக அணைக்கட்டு கால்நடை மருத்துவர் மோகன் குமார் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், போட்டியில் பங்கேற்க கொண்டுவரப்பட்டிருந்த 225 காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதில் 205 காளைகளுக்கு மட்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் அதிவேகமாகவும் ஆக்ரோஷமாக ஓடி இலக்கை அடைந்தது.
26 பேர் காயம்
அப்போது காளைகள் ஓடும் பாதையில் நின்று விசில்அடித்து மாட்டின் மீது கைகளை போட்ட பார்வையாளர்கள் மாடுகள்முட்டி மோதியது. இதில் 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு காளைகள் படுகாயமடைந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர் மோகன் குமார் சிகிச்சை வழங்கினார்.
விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அதிவேகமாக ஓடி குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்த மாட்டின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2-வது பரிசு ரூ.60 ஆயிரம், 3-ஆவது பரிசு 50 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.40 ஆயிரம் உள்பட மொத்தம் 43 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தார்வழி கல்லாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story