வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பகல் வேளையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த 10-ந் தேதி 94 டிகிரியும், 11-ந் தேதி 94.2 டிகிரியும், 12-ந் தேதி 94 டிகிரியும், இன்று 97 டிகிரியாகவும் பதிவாகியது.
வெயிலிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.
மேலும் தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story