அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியின் 30-ம் ஆண்டு நிறைவு அஞ்சல் அட்டை வெளியீடு
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியின் 30-ம் ஆண்டு நிறைவு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியின் 30-ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், கடல் கண்காணிப்பு பணியில் கடற்படை விமானப்பிரிவின் சுயசார்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் நீண்ட தூர கடல்சார் உளவு விமானப் படை மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி ஆகியன இயங்கி வருகின்றன. இந்த விமான நிலையம் அதிநவீன போயிங் பி81 சீ கார்டியன் ஹை ஆல்டி டியூட் லாங் ரேஞ்ச், தொலைதூர பைலட்டட் விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை இயக்கும் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது குறித்து கருத்தரங்கள் விளக்கினர்.
தொடர்ந்து கடல்சார் கண்காணிப்பில் மூன்று தசாப்தங்களின் சிறப்பு என்ற சிறப்பு அஞ்சல் அட்டையை இந்திய நேவல் அகாடெமியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் புனீத் குமார் பாஹல் வெளியிட்டார். அப்போது இந்திய அஞ்சல் துறையின் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story