சத்துணவு ஊழியர் சங்கத்திற்கு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநாட்டில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநாட்டில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 15-வது மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டில் 2-வது நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில தலைவராக மயிலாடுதுறையை சேர்ந்த கலா, பொதுச்செயலாளராக புதுக்கோட்டையை சேர்ந்த மலர்விழி, மாநில பொருளாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த திலகவதி, மாநில துணை தலைவர்களாக மதுரையை சேர்ந்த நூர்ஜஹான், தேனியை சேர்ந்த பேய்த்தேவன், திருவண்ணாமலையை சேர்ந்த அண்ணாதுரை, திருச்சியை சேர்ந்த பெரியசாமி, தூத்துக்குடியை சேர்ந்த தமிழரசன், சென்னையை சேர்ந்த சுபந்தி, கிருஷ்ணகிரி மஞ்சுளா, மாநிலச் செயலாளர்களாக சென்னை கற்பகம், வேலூர் சுமதி, தருமபுரி மகேசுவரி, மதுரை பாண்டிச்செல்வி, திருவாரூர் லதா, கோவை நிர்மலா, சிவகங்கை மிக்கேலம்மாள், மாநில தணிக்கையாளர்களாக விழுப்புரம் தேசிங்கு, கன்னியாகுமரி தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாடு
பின்னர் நடந்த மாநாட்டுக்கு மாநில தலைவர் கலா தலைமை தாங்கினார். வரவேற்புக் குழுத் தலைவர் சுந்தர் ராஜன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநிலத் தலைவர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். துணைத்தலைவர் பேய்த்தேவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story