திருநங்கைகள் அடையாள அட்டைகளை சமூக நல அலுவலரை நேரடியாக தொடர்பு கொண்டு பெறலாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் பெற்று வழங்கும் பொருட்டு குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டைகள் பெறப்படாமல் உள்ள திருநங்கைகள் அடையாள அட்டை பெற திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலரை நேரடியாக தொடர்பு கொண்டு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், இரண்டாம் தளம் திருவள்ளூர் தொலைபேசி எண் 044-29896049 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story