2-வது நாளாக தீப்பிடித்து எரியும் நெக்னாமலை காப்புக்காடுகள்
2-வது நாளாக நெக்னா மலை காப்புக்காடு தீப்பிடித்து எரிகிறது.
வாணியம்பாடி
ஆலங்காயம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெக்னாமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் தொடர்ந்து பல மணி நேரம் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் நாசமாயின. நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் நெக்னாமலையின் மற்றொரு பகுதியில் மர்ம நபர்கள் காப்புக்காட்டுக்கு தீ வைத்தனர். இதனால் தொடர்ந்து 2-வது நாளாக மலையில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் எரிந்து வருகிறது. தற்போது காற்று வீசுவதால் நெக்னாமலை காப்புக்காட்டுக்கு அருேக ஆம்பூர் வனப்பகுதியில் உள்ள காடுகளும் தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வனச்சரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு காட்டுக்கு தீ வைக்கும் மர்மநபர்களை பிடித்தும், தீயை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story