காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்க்கா கந்தூரி விழா


காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்க்கா கந்தூரி விழா
x
தினத்தந்தி 13 March 2022 8:36 PM IST (Updated: 13 March 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்க்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காரைக்கால், மார்ச்.13-
காரைக்கால் மஸ்தான் சாஹிப்  வலியுலாஹ் தர்க்காவில் கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இறைதூதர்
சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள பல்வேறு நாடுகள் வழியாக இந்தியா   வந்தார்.  இவர், இந்தியாவில்,   திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார்.
காரைக்காலில் தங்கி இருந்தபோது தனது 120-வது வயதில் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்க்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.     இந்த  ஆண்டு 199-வது கந்தூரி விழா, இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடி ஊர்வலம்
முன்னதாக,   இன்று  பிற்பகல் கண்ணாடி ரதங்கள், மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட ரதங்களுடன், பல்லக்கில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல் சென்று   பள்ளிவாசனை அடைந்தது.  இதனை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான      இஸ்லாமியர்கள் மற்றும்   இந்து,  கிருஸ்துவ மக்களும் கலந்துகொண்டனர். 
விழாவில் வருகிற 22-ந் தேதி இரவு 10 மணிக்கு சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.

Next Story