முதுமலை மைசூரு சாலையோரம் வேட்டையாட காத்திருந்த புலி
முதுமலை- மைசூரு செல்லும் சாலையோரம் இரையை வேட்டையாட புலி ஒன்று காத்திருந்தது. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
கூடலூர்
முதுமலை- மைசூரு செல்லும் சாலையோரம் இரையை வேட்டையாட புலி ஒன்று காத்திருந்தது. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்
.
படுத்து கிடந்த புலி
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், காட்டெருமை, மான் போன்ற விலங்குகள் குடிநீர், தீவனம் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்த விலங்குகளை வேட்டையாட சிறுத்தை, புலி சாலையோரத்தில் மறைந்திருந்து தாக்கி வேட்டையாடி சாப்பிட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை காலை 9 மணிக்கு முதுமலை தெப்பக் காட்டில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் புலி ஒன்று இரையை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் படுத்துக் கிடந்தது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி அந்த புலியை பீதியுடன் பார்த்து ரசித்தனர்.
மேலும் சிலர் அந்த புலியை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்தனர்.
இதற்கிடையே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததை பார்த்த புலி, அங்கிருந்து மெதுவாக எழும்பி, வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, வார இறுதி நாளில் சுற்றுலா வந்த இடத்தில் புலியை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
சாலையை கடக்க முயன்றபோது
வாலிபர்கள் மீது புலி பாய்ந்தது
தெலுங்கானாவை சேர்ந்த ரகுமான் (வயது 35), சசிதர்மலா (34) ஆகியோர் ஊட்டி வந்தனர். பின்னர் அவர்கள் கூடலூர் வழியாக மோட்டார் சைக்கிளில் மைசூரு சென்றனர்.
அவர்கள் முதுமலை கார்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று சாலையை கடப்பதற்காக வேகமாக சென்றது. அந்த நேரத்தில் ரகுமானும், சசிதர்மலாவும் அந்த வழியாக வந்ததால், அந்த புலி அவர்கள் மீது பாய்ந்தது.
இதில் அவர்கள் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அதுபோன்று அந்த புலியும் அங்கு விழுந்தது. நல்லவேளையாக அந்த புலி எழும்பி சாலையின் மறுபுறம் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story