கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை தொகை முறைகேட்டில் இளநிலை உதவியாளர் கைது
திருவள்ளூர் அருகே கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை தொகையில் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
முறைகேடு
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் அரசு வழங்கும் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் கார்த்திகேயன், வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருவள்ளூர் வணிகவியல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை எரிவாயு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ஊத்துக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2017 வரை வழங்கிய கியாஸ் மானியத்தில் ரூ.18 லட்சத்து 29 ஆயிரத்து 379 முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
கைது
இதுதொடர்பாக ஊத்துக்கோட்டை எரிவாயு மையத்தில் இளநிலை உதவியாளராக உள்ள திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த எழிலரசன் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story