வேலை உறுதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
வேலை உறுதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
டத்துக்குளம் பேரூராட்சி பகுதிகளிலும் தேசிய ஊரக வேலை உறு தியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலை உறுதியளிப்பு திட்டம்
மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு
கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம் சங்கராமநல்லூர் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. நிர்வாக அமைப்பில் பேரூராட்சியாக செயல்பட்டாலும், கிராம கட்ட மைப்பில்தான் இன்னும் உள்ளது. இங்கு கூலிதொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
தற்போது தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் ஊராட்சிகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு குமரலிங்கம் பேரூராட்சியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சி பகுதிகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
கோரிக்கை
எனவே மடத்துக்குளம் கணியூர், சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதிகளிலும் தேசிய வேலை உறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story