அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகள நிகழ்ச்சி
அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகள நிகழ்ச்சி
ஆரணி
கண்ணமங்கலம் அருகே பாளைய ஏகாம்பரநல்லூரில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த 21-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தினமும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் இன்று காலை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் போர்க்களத்தில் போரிடுவதுபோல தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
தொடர்ந்து மாலையில் அக்னி வசந்த விழா நடைபெற்றது,
இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.
நாளை (திங்கட்கிழமை) தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story