விழுப்புரத்தில் ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது

விழுப்புரத்தில் ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது
x
தினத்தந்தி 13 March 2022 9:26 PM IST (Updated: 13 March 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது

விழுப்புரம்

ரகசிய தகவலின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் விழுப்புரம் அலமேலு புரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வியாபாரி ராஜாராம்(வயது 58) என்பவர் விற்பனை செய்வதற்காக தனது வீட்டின் அருகே போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக ராஜாராமை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story