கூட்டுறவு பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டது


கூட்டுறவு பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 13 March 2022 9:40 PM IST (Updated: 13 March 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கூட்டுறவு சங்கத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதிய தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வள்ளிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் கோவி. சம்பத்குமார் பங்கேற்று அந்தச் சங்கத்தில் ஓய்வுபெற்ற செயலாளர் அன்பரசுக்கு கருணை ஓய்வு ஊதியம் ரூ.12 ஆயிரத்தை வழங்கினார்.

அதேபோல் ஓமகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஓய்வுபெற்ற பணியாளர்கள், செயலாளர் ஆர்.எம். சீனன், விற்பனையாளர்கள் எம். பலராமன், சி. ராஜேந்திரன் ஆகியோருக்கு கருணை ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தை சங்கத்தின் தலைவர் கே.குப்பன் வழங்கினார்.

Next Story