கடற்கரையோரத்தில் ரத்தக்காயங்களுடன் தனியார் நிறுவன ஊழியர் பிணம்


கடற்கரையோரத்தில் ரத்தக்காயங்களுடன் தனியார் நிறுவன ஊழியர் பிணம்
x
தினத்தந்தி 13 March 2022 10:00 PM IST (Updated: 13 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையோரத்தில் ரத்தக்காயங்களுடன் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரையோரத்தில் நேற்று காலை ரத்தக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைஅந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்த கருணாமூர்த்தி மகன் மதன்குமார்(வயது 22) என்பதும், சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. 

போலீசார் விசாரணை

இதையடுத்து மதன் குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story