கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? -பொதுமக்கள்
கீழ்வேளூரில் கடந்த 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சிக்கல்:-
கீழ்வேளூரில் கடந்த 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தீயணைப்பு நிலையம்
கீழ்வேளூர் தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏற்படும் தீவிபத்துகளின்போது மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்வேளூர் தெற்கு வீதியில் கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி தீயணைப்பு நிலையம் தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.
இங்கு செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வாடகை கட்டிடம்
கடந்த 25 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தீயணைப்பு வாகனம் நிறுத்த தனியாக இடம் இல்லாததால் தீயணைப்பு நிலையத்தின் முன்பு செட் அமைத்து வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு நிலையம் இருப்பதே தெரியாமல் உள்ளது. எனவே தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தமாக அரசு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக அரசு நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்தைதோப்பு பகுதியில் பழைய கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகத்தில் தீயணைப்பு நிலைய அலுவலக கட்டிடம் கட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.
புதிய கட்டிடம்
தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுவதற்கு துறை ரீதியான அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட அரசு இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story