மத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


மத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 March 2022 10:17 PM IST (Updated: 13 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் லட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story