மத்திகிரி அருகே பூ வியாபாரி தற்கொலை


மத்திகிரி அருகே பூ வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 13 March 2022 10:17 PM IST (Updated: 13 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மத்திகிரி, :
ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சுரேந்திர குமார் (வயது 33). பூ வியாபாரி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுரேந்திரகுமார் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்திரகுமார் இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story