தர்மபுரி குண்டலப்பட்டியில் இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி
தர்மபுரி குண்டலப்பட்டியில் இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:
தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் அட்மா திட்டத்தின் சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கோழி வளர்ப்பு மேலாண்மை பயிற்சி தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜெயபாலன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். வேளாண் அலுவலர் சுதா வரவேற்று பேசினார். மையத்தின் உதவி பேராசிரியர் கண்ணதாசன் இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பணிகள் மற்றும் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார். இதில் கோழி இனங்கள், கொட்டகை அமைத்தல், நோய் மேலாண்மை, குஞ்சு பொரிப்பு மேலாண்மை, பதிவேடுகள் பராமரிப்பு, சந்தைப்படுத்துதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், ஜெயந்தி, முனியப்பன், ராஜேஸ்குமார் ஆகியோர் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் வசந்தரேகா, முன்னாள் விரிவாக்க கல்வி இயக்குனர் சந்திரகாசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கையேடுகளை வழங்கினர்.
Related Tags :
Next Story