தர்மபுரியில் அரசு பணியாளர் சங்க கூட்டம்
தர்மபுரியில் அரசு பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பிரசார செயலாளர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28, 29-தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க மாநில தலைவர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் பிச்சைமுத்து, மாநில பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story