தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி சூடிக் கொடுத்த சுடர் கொடியாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுடர் கொடியாள் சூடி கொடுத்த மாலை திருவீதி உலா நடந்தது. அப்போது மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை அழைப்பும் நடைபெற்றது. நேற்று திருப்பள்ளி எழுச்சி பாராயணத்துடன் சாமிக்கு பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை நடைபெற்றது. மேலும் 10 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கணபதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் ஊஞ்சல் சேவையும், சாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன், சிறப்பு அலங்கார சேவையும் நடந்தது. பின்னர் சுதர்சன யாகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story