காவேரிக்கொட்டாய் கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க பூமி பூஜை கோவிந்தசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
காவேரிக்கொட்டாய் கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து கோவிந்தசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சி காவேரிக்கொட்டாய் பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அக்ரோ துணை தலைவர் நெம்பர்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகநாதன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் வேலுமல்லன், புழுதிகரை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜா, கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story