தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு
நாகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தர்பூசணி பழங்களின் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
வெளிப்பாளையம்:-
நாகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தர்பூசணி பழங்களின் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
நாகை மாவட்டத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பங்குனி மாதம் தொடங்க இருப்பதால் வெயிலின் தாக்கமும் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெயில் சுட்டெரித்து வருவதால் நாகை பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாலையோரங்களில் கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்யும் வகையில் புதிது புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தர்பூசணி வரத்து அதிகரிப்பு
வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி பழங்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நாகைக்கு தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தர்பூசணி விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்து நாகைக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நாகை காடம்பாடி உள்ளிட்ட இடங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. உடலுக்கு கேடு விளைவிக்காத தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் கூறினர்.
Related Tags :
Next Story