எரளூர் கிராமத்தில் தீ விபத்து 5 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்


எரளூர் கிராமத்தில் தீ விபத்து 5 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்
x
தினத்தந்தி 13 March 2022 10:22 PM IST (Updated: 13 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

எரளூர் கிராமத்தில் தீ விபத்து 5 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்




திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எரளூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லை மகன் மணிபாலன் என்பவர் தனது வயலில் உள்ள கரும்புகளை வெட்டி விட்டு சோகையை தீயிட்டுக் கொளுத்தினார். அப்போது பலத்த காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த சக்கரை, தாமோதரன், ஏழுமலை, கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 விவசாயிகளின் கரும்பு தோட்டங்களுக்கும் தீ  பரவியதால் கரும்புகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story